< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
2 July 2023 12:15 AM IST

சீர்காழி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவெண்காடு:

சீர்காழி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவலோக நாத சுவாமி கோவில்

சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற திருப்புன்கூர் சிவலோக நாத சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவனை வழிபட ஏதுவாக நந்தி விலகியதாகவும், அதன் காரணமாக சன்னதி முன்பு சற்று விலகிய நிலையில் நந்தி இருப்பதையும் பக்தர்கள் காணலாம். இந்த கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதனை ஒட்டி சிவலோகநாதர் மற்றும் நந்திக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

இதேபோல் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனை ஒட்டி நந்தி பகவானுக்கு பால் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்தி மற்றும் சிவனுக்கு ஒருசேர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார் செய்திருந்தனர். மேலும் திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் சுவாமி கோவில், சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோவில், அன்னப்பன்பேட்டை கலி காமேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சாமி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்