< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
குமரி மாவட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
|3 May 2023 11:45 PM IST
குமரி மாவட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
களியக்காவிளை:
குமரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியில் உள்ள 2-வது சிவாலயமான மகா தேவர் கோவிலில் நந்தி பகவான் மற்றும் மகா தேவருக்கு பால், இளநீர், தேன், பன்னீர் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் சிவாலய ஓட்டம் நடைபெறும் பிற சிவன் கோவில்கள் உள்பட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.