< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
20 Jan 2023 12:15 AM IST

நாகை பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காயாரோகணசாமி மற்றும் நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்திக்கு வில்வ இலை மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், மலையீஸ்வரன் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திரசாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில், காங்கேய சித்தர் பீடம், அந்தணப்பேட்டை அண்ணாமலையார் கோவில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்