விருதுநகர்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
|மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம்,
மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரதோஷ வழிபாடு
ராஜபாளையம் சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மாயூரநாத சுவாமி கோவில், கருப்பஞானியார் கோவில், அருணாச்சலேஸ்வரர் கோவில், குருசாமி கோவில், பறவை அன்னம் காத்தருளிய சாமி கோவில், மதுரை சாலையில் உள்ள தாரண்யா நந்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச்சாறு, பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
சாமி தரிசனம்
அதேபோல சேத்தூர் திருக்கண்ணீஸ்வரர் கோவில், சொக்கநாதன்புத்தூர் தவநந்திகண்டீஸ்வரர் கோவில், தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில், வாழவந்தாள்புரம் கிராமத்தில் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், தெற்கு வெங்கநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரம பாண்டீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
அயன் கொல்லங்கொண்டான் வீரபாண்டீஸ்வரர் கோவில், இளந்திரை கொண்டான் காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டி சங்கரலிங்கசாமி, கண்மாய்பட்டி ஆகாய லிங்கேஸ்வரர், எதிர்கோட்டை துணைகண்ட லிங்கேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக நந்திக்கு பால், தயிர், நெய் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நந்தி, அமுதலிங்கேஸ்பரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.