< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி பகுதிசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பகுதிசிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
14 Aug 2023 12:15 AM IST

கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

சங்கராபுரம்,

கள்ளக்குறிச்சி அடுத்த சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சட்ட கணேசன் செய்திருந்தார்.இதேபோல் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்