< Back
மாநில செய்திகள்
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
விருதுநகர்
மாநில செய்திகள்

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
13 Oct 2023 12:15 AM IST

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு நடந்தது

வத்திராயிருப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களில் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி கோவில் நிர்வாகம் செய்து கொடுத்திருந்தனர்.

மேலும் செய்திகள்