திருவண்ணாமலை
பனையம்மன் கோவில் தேர்த்திருவிழா
|பெரிய கொழப்பலூர் பனையம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.
சேத்துப்பட்டு
பெரிய கொழப்பலூர் பனையம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.
சேத்துப்பட்டு தாலுகா பெரிய கொழப்பலூர் கிராமத்தில் பனையம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரத்தில் பனையம்மன் வீதி உலா வந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் பனையம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பின்னர் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரான முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் மாட வீதி வழியாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் நித்திய பிரியாநடராஜன், ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா வேலன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை பெரணமல்லூர் ஒன்றிய கவுன்சிலர் காமாட்சி வெங்கடேசன் செய்திருந்தார்.