< Back
மாநில செய்திகள்
பயிற்சி மருத்துவர் கொலை - நா.த.க. இன்று ஆர்ப்பாட்டம்
மாநில செய்திகள்

பயிற்சி மருத்துவர் கொலை - நா.த.க. இன்று ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
23 Aug 2024 9:16 AM IST

சென்னையில் நாம் தமிழர் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னை,

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறையும், மகளிர் பாசறையும் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார்.

அதன் பேரில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பகல் 2 மணிக்கு, சென்னை எழும்பூர், இராஜரத்தினம் திடல் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்