< Back
மாநில செய்திகள்
மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
8 Jun 2023 6:45 PM GMT

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கமுதி,

கமுதியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான மைய பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கமுதியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக, முதல்-அமைச்சாின் காலை உணவு திட்டத்திற்கான மையப் பொறுப்பாளா்களுக்கு முதல்நாள் பயிற்சி நடைபெற்றது. இதில் 40 மைய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். திட்ட இயக்குநா் அபிதா ஹனிப், கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவா் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் தலைமை தாங்கினா். உதவி திட்ட அலுவலா் அழகப்பன், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலா் மணிமேகலை முன்னிலை வகித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் செய்திருந்தார். இதில் வட்டார ஒருங்கிைணப்பாளர்கள் திரவியம், சேதுபதி, பில்லத்தியான், மாரிமுத்து, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனா்.

மேலும் செய்திகள்