< Back
மாநில செய்திகள்
புதுச்சத்திரத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

புதுச்சத்திரத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

தினத்தந்தி
|
4 Jun 2023 6:45 PM GMT

புதுச்சத்திரம் வட்டாரத்தில் உள்ள அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் வட்டார வள மையத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சி 3 நாட்கள் நடந்தது. பயிற்சிக்கு புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியம், சந்திரசேகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் அம்ரு நிஷா முன்னிலை வகித்தார்.

இதில் தமிழ், ஆங்கிலம் உள்பட அனைத்து பாடங்களிலும் எண்ணும், எழுத்தும் கற்பித்தல் முறையில் ஆசிரியர்களுக்கு கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர். முதல் பருவத்திற்கான எண்ணும், எழுத்தும் பயிற்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பாடக்கருத்துகளை செயல்பாடுகள் மூலம் கருத்தாளர்கள் விளக்கினர். இந்த பயிற்சியில் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 80 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆசிரியர்களுடன் பயிற்சி குறித்து கலந்துரையாடினார். இந்த பயிற்சியின் கருத்தாளர்களாக ஜெயராஜ், பன்னீர்செல்வம், தேசிகன், ராமசந்திரமூர்த்தி, சரவணன், தனசேகரன், ரமேஷ், தெய்வானை, உமா பாரதி, தேன்மொழி புனிதம் மற்றும் வனிதா ஆகியோர் செயல்பட்டனர்.

மேலும் செய்திகள்