< Back
மாநில செய்திகள்
எண்ணும், எழுத்தும் கற்றல் திறன் பயிற்சி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

எண்ணும், எழுத்தும் கற்றல் திறன் பயிற்சி

தினத்தந்தி
|
22 March 2023 6:45 PM GMT

எண்ணும், எழுத்தும் கற்றல் திறன் பயிற்சி நடைபெற்றது

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள வெங்கலகுறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு இன்னும் எழுத்தும் கற்றல் திறன் பயிற்சி நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் ஆலிஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் கலந்து கொண்டு கற்றல் திறன் பற்றி விரிவாக விளக்கி கூறினார். அப்போது பேசிய தலைமை ஆசிரியர் ஆலிஸ் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் இயங்காததால் தொடக்க வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் பின்வாங்கி உள்ளது. அடிப்படை கணிதம் எழுத்துக்களை அறிமுகப்படுத்துதல் வாசித்தல் பயிற்சி வழங்கும் நோக்கில் எண்ணம் எழுத்தும் திட்டம் இக்கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்தபட்ச கற்றல் அடைவுதிறன் பூர்த்தியடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் பாடத்திட்டம் குறைவாக இருப்பதோடு புத்தகத்தை கொண்டு பாடம் நடத்தாததால் பெற்றோர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று என்னும் எழுத்தும் திட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்தநிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பானுமதி, தொடக்கப்பள்ளி உதவி ஆசிரியர் உதயசங்கர், தட்சிணாமூர்த்தி, வார்டு உறுப்பினர் கிருஸ்டினா, கிராம பெரியவர் கோவிந்தன் உட்பட மாணவர்களின் பெற்றோர் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்