< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி

தினத்தந்தி
|
28 Dec 2022 7:02 PM GMT

மோகனூரில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மோகனூர்

மோகனூர் தாலுகா அலுவலகத்தில் 64 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டன. வட்ட வழங்கல் அலுவலர் சகிதா கலந்து கொண்டு விற்பனையாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது குறித்து பயிற்சி அளித்தார். அப்போது, பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, செங்கரும்பு, ரூ.1000 வழங்கப்பட உள்ளன. வருகிற ஜனவரி 3-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை பொங்கல் பரிசு டோக்கன் வழங்க வேண்டும். பொருட்களை வெள்ளை கலர் சாக்கில் பச்சரிசி, சர்க்கரை புதிதாக வருவதை மட்டுமே கொடுக்க வேண்டும். மேலும் பரிசு பொருட்களுக்கு டோக்கன் வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே ரேஷன் கடையில் உள்ள பொருட்களை கண்டிப்பாக வழங்க கூடாது. ஒவ்வொரு கடைகளிலும் உரிய இருப்பு கொடுக்க வேண்டும். கடை எண், விற்பனையாளர் பெயர், மெசின் ஆன்செய்த நேரத்தை தெரிவிக்க வேண்டும் என்றார். இதில் தனி வருவாய் ஆய்வாளர் பூபாலன், ரேஷன் கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்