< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோட்டில்   பேரிடர்களில் சிக்கியவர்கள் மீட்பது குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோட்டில் பேரிடர்களில் சிக்கியவர்கள் மீட்பது குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி

தினத்தந்தி
|
7 Oct 2022 6:45 PM GMT

திருச்செங்கோட்டில் பேரிடர்களில் சிக்கியவர்கள் மீட்பது குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி

எலச்சிபாளையம்‌:

திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பேரிடர் காலங்களில் சிக்கி கொண்டவர்களை தங்களிடம் உள்ள சிறிய பொருட்களை கொண்டு மீட்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா மற்றும் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆபத்தில் சிக்கி உள்ள ஒருவரை எவ்வாறு கைகளில் தூக்கி செல்வது. கிடைக்கும் எளிமையான பொருட்களை கொண்டு ஸ்டெக்சர்கள் செய்வது எப்படி? ரத்தக்காயங்களுடன் இருப்பவர்களை மீட்பது குறித்து 15 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பொதுமக்களிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் தாசில்தார் அப்பன்ராஜ், மீட்புக்குழு சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்