< Back
மாநில செய்திகள்
இளைஞர் திறன் பயிற்சி திருவிழா
சிவகங்கை
மாநில செய்திகள்

இளைஞர் திறன் பயிற்சி திருவிழா

தினத்தந்தி
|
19 July 2022 5:14 PM GMT

சிவகங்கையில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழாவை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.


சிவகங்கையில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழாவை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

இளைஞர் திறன் பயிற்சி திருவிழா

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், இளைஞர் திறன் பயிற்சி விழாவின் போது பயிற்சி வழங்கும் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மானாமதுரை எம்.எல்.ஏ. .தமிழரசி முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் வானதி வரவேற்றார்.

விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பயிற்சியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து இளைஞர் திறன் திருவிழா முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் சார்பிலும், தனியார் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடனும் இளைஞர்திறன் திருவிழா நடைபெறுகிறது. தற்போது 23 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் 1,750 இளைஞர்கள் பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கு பின்பு அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்படபலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு பஸ்கள்

முன்னதாக வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 186 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ள 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போட்டிகள் குறித்த விளம்பர பதாகைகள் கொண்ட பஸ்கள் மாவட்டம் முழுவதும் இயக்கப்பட உள்ளது.

இந்த பஸ்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்