< Back
மாநில செய்திகள்
ஓசூரில்  ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு கணினி பயிற்சி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு கணினி பயிற்சி

தினத்தந்தி
|
28 May 2022 5:11 PM GMT

ஓசூரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு கணினி பயிற்சி

ஓசூர்:

ஓசூரில் உள்ள தர்கா பகுதியில் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இதனை தொண்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இங்கு குழந்தை திருமணத்தின் மூலம் மீட்கப்பட்ட ஆதரவற்ற 28 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கணினி மற்றும் அழகுக்கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆராதனா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ராதா முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து சமூகநலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். இதில் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்