< Back
மாநில செய்திகள்
12-ந் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
சேலம்
மாநில செய்திகள்

12-ந் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

தினத்தந்தி
|
7 Oct 2023 12:30 AM IST

சேலத்தில் விவசாயிகளுக்கு 12-ந் தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சேலம் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் வடிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கால்நடை, கோழி வளர்ப்பில் பல புதிய தொழில் நுட்பங்களை செயல்படுத்தி வருகிறது. அதே போன்று விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி வருகிற 12-ந்தேதி கறவை மாடு வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 19-ந்தேதி வெண்பன்றி, 30-ந் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு ஆகியவற்றுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்