< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்பு
|17 Oct 2023 2:19 PM IST
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பிரபுசங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு கரூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த த.பிரபுசங்கர் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை அதிகாரிகள் அலுவலர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.