< Back
மாநில செய்திகள்
உயர் அழுத்த மின்கோபுரம் திடீரென  சாய்ந்தது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

உயர் அழுத்த மின்கோபுரம் திடீரென சாய்ந்தது

தினத்தந்தி
|
7 Sept 2022 11:24 PM IST

உயர் அழுத்த மின்கோபுரம் திடீரென சாய்ந்தது

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மானாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட விவசாய இடங்களில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான உயர் அழுத்த மின்சார மிக உயரமான மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் மூலம் வழுதூரிலிருந்து தாமரைக்குளம் வழியாக மானாங்குடி ஊராட்சி பகுதி முதல் மண்டபம் வரை மின்சார இணைப்புகள் செல்கின்றன. இந்த மின் கம்பங்கள் அனைத்தும் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக மக்கள் தொடர்ந்து முறையிட்டு மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டி மின்சார துறையிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை தினத்தந்தியில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்று 100 அடி உயர உயர் அழுத்த மின் கோபுரம் திடீரென தரையில் சாய்ந்து விழுந்தது. அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் விபத்து தடுக்கப்பட்டது. இதைப்பார்த்த கடுக்காய் வலசை மக்கள் மானாங்குடி ஊராட்சி தலைவர் பரமேஸ்வரி பத்மநாபன் தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டு உச்சிப்புளி மின் அலுவலக உதவி பொறியாளர் மற்றும் அலுவலர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து உடனடியாக மின்சாரம் துண்டிக்கப் பட்டு சம்பவ இடத்தில் மின்சார அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆபத்தான நிலையில்உள்ள மின்கம்பங்களை உடனே மாற்ற வேண்டும் என்று மானாங் குடி கிராம பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்