< Back
மாநில செய்திகள்
நத்தம், அய்யலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நத்தம், அய்யலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
7 Aug 2023 1:44 AM IST

நத்தம், அய்யலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

வடமதுரை அருகே அய்யலூர் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி அய்யலூர், குருந்தம்பட்டி, தங்கம்மாபட்டி, வளவிசெட்டிபட்டி, வடுகபட்டி, மாமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்