சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
|பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ஒருசில இடங்களில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
டி.ஐ.சைக்கிள் மற்றும் மேனாம்பேடு: கிருஷ்ணாபுரம், விநாயகபுரம், செங்குன்றம் சாலை, மேனாம்பேடு, பி.ஆர்.ஆர். நகர், ராஜீவ் நகர், திருமலைப்பிரியா நகர்.
கோவிலம்பாக்கம்: ஓம் சக்தி நகர், சத்யா நகர், சுபீஷா அவென்யூ. சுசீலா நகர், பி.எம்.டி. நகர், வடக்குப்பட்டு மெயின் ரோடு, பெரியார் நகர், திருவேங்கடம் நகர், தர்மபூபதி நகர், திருவள்ளூர் தெரு, நவீன்ஸ், பெல் நகர் இணைப்பு சாலை (பகுதி)
பள்ளிக்கரணை: காமகோடி நகர் (பகுதி), ஐ.ஐ.டி.காலனி (பகுதி), நாகம்மாள் அவென்யூ, வி.ஜி.பி. ராஜேஷ் நகர் (பகுதி), மா.பொ.சி. நகர் (பகுதி). இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.