தஞ்சாவூர்
தஞ்சையில் நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு..!
|தஞ்சை பகுதியில் 4-ந் தேதி மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்;
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அண்ணாநகர், அருளானந்தநகர், பிலோமினா நகர், காத்தூண்நகர், சிட்கோ, காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வி.ஓ.சி.நகர், பூக்காரத்தெரு, 20-கண் பாலம், கோரிக்குளம், மேரீஸ்கார்னர், மங்களபுரம், கணபதி நகர், ராஜப்பாநகர், மகேஸ்வரி நகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், வீட்டுவசதிவாரியகுடியிருப்பு பகுதி, எஸ்.இ.அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜராஜேஸ்வரி நகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.நகர், போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர், யாகப்பாநகர், அருளானந்தஅம்மாள்நகர், குழந்தைஏசு ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.