திருச்சி
காற்றுடன் பலத்த மழை; மின்கம்பங்கள் உடைந்தன
|காற்றுடன் பலத்த மழையால் மின்கம்பங்கள் உடைந்தன.
துவாக்குடி:
திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மேலும் துவாக்குடி அருகே உள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேல மங்காவனம் கிராமத்திற்கு துவாக்குடி மின்வாரியத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்றுடன் பெய்த மழையின் காரணமாக திருநெடுங்குளத்தில் இருந்து மேல மங்காவனத்திற்கு செல்லும் வழியில் உள்ள 8 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.
இதையடுத்து மேலமங்காவனம் கிராமத்தில் 2 நாட்களாக மின்சாரம் தடைபட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக கூறப்படுகிறது. இதனால் மேல மங்காவனத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி, மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.