< Back
மாநில செய்திகள்
ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள்

தினத்தந்தி
|
8 Sep 2023 7:30 PM GMT

திருமருகல் அருகே வயல் வெளியில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் இருப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

திருமருகல் அருகே வயல் வெளியில் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் இருப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

ஆபத்தான நிலையில்...

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் விவசாயிகள் 50 ஏக்கர் பரப்பளவில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்து வருகின்றனர். சேகல் - நாட்டார்மங்கலம் சாலை பகுதியில் உள்ள மின் மோட்டார்களுக்கு திருமருகல் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சேகல் சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு மின்சாரம் கொண்டு செல்ல மின் கம்பிகளுக்கு பதிலாக மின் வயர்கள் மூலமாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காற்று வேகமாக வீசும் நேரங்களில் இந்த வயர்கள் அறுந்து சாலையில் விழுந்து கிடக்கின்றன.

விவசாயிகள் அச்சம்

மேலும் வயல்வெளிகளில் உள்ள மின்கம்பங்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். சில நேரங்களில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் கிடைப்பதில்லை எனவும் விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

இதுகுறித்து திருமருகல் மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள். ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்