மதுரை
இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
|மதுரையில் பராமரிப்பு பணிக்காக இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரை தெப்பம் துணை மின்நிலையத்தில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே வடிவேல் நகர், பங்கஜம் காலனி முழுவதும், மாரியம்மன் கோவில் தெரு, மண்டபம் சாலை, தியாகராசர் கலைக்கல்லூரி பகுதிகள், மைனர் ஜெயில் பகுதிகள், பழைய செக்போஸ்ட் பகுதிகள், நிர்மலா பள்ளி வளாகப் பகுதிகள் மற்றும் காமராஜர் சாலை சில பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
அதே போல் விக்ரமங்கலம் துணை மின் நிலையத்தில் காடுபட்டி பீடர், மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் ஏர்ரம்பட்டி பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விக்கிரமங்கலம் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகள், காடுபட்டி, புதுப்பட்டி, சாத்தையாறு அணை, செம்பட்டி, கோணப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.