< Back
மாநில செய்திகள்
கடம்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின்தடை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கடம்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
14 Jun 2022 10:21 AM IST

கடம்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மின்வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக இன்று(செவ்வாய்க்கிழமை) கடம்பத்துார், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பானம்பாக்கம், மணவூர், விடையூர், ஆட்டுப்பாக்கம், திருப்பாச்சூர், கைவண்டூர், பெரிய களக்காட்டூர், சின்ன களக்காட்டூர், சின்னம்மாபேட்டை அகரம், வெண்மனம்புதுார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும்.

இவ்வாறு திருமழிசை மின்வாரிய செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்