< Back
மாநில செய்திகள்
கீழக்கரையில் இன்று மின்தடை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கீழக்கரையில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
29 July 2022 11:13 PM IST

கீழக்கரையில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

கீழக்கரை,

கீழக்கரை துணை மின் நிலையத்தில் உயர் மின்அழுத்த பாதையில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணி இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே கீழக்கரை டவுன் பீடருக்கு உட்பட்ட பகுதிகளான வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்குவெட்டி தெரு, இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன்மார்க்கெட், பைத்துமால் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை உதவி மின்செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்