< Back
மாநில செய்திகள்
வாங்கல், தாந்தோணிமலை, க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
கரூர்
மாநில செய்திகள்

வாங்கல், தாந்தோணிமலை, க.பரமத்தி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:03 AM IST

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வாங்கல், தாந்தோணிமலை, க.பரமத்தி பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மாதாந்திர பராமரிப்பு

கரூர் கோட்டத்திற்குட்பட்ட ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், குப்புச்சிபாளையம், தாந்தோணிமலை, வேப்பம்பாளையம், வெள்ளியணை ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி ஒத்தக்கடை துணை மின் நிலையத்தை சேர்ந்த ஒத்தக்கடை, சோமூர், வேடிச்சிபாளையம், எழுத்துப்பாறை, கல்லுப்பாளையம், திருமுக்கூடலூர், நெரூர் அக்ரஹாரம், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், மரவாப்பாளையம், புதுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை, அச்சமாபுரம், பதினாறுகால் மண்டபம், செல்லிபாளையம், கோயம்பள்ளி, பெரிய காளிப்பாளையம், சின்ன காளிப்பாளையம், சேளப்பாடி, மல்லம்பாளையம், முனியப்பனூர்.

பாலம்பாள்புரம் துணை மின் நிலையத்தை சேர்ந்த பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோவில் தெரு, கச்சேரிபிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், புதுத்தெரு, மார்க்கெட், அரசுகாலனி, பஞ்சமாதேவி, பூந்தோட்ட காளிப்பாளையம், கருங்கல் காலனி, லட்சுமி நகர், அம்பானி கார்டன், அருகம்பாளையம், கொங்கு நகர் மெயின்ரோடு, தங்கம் நகர், எஸ்.பி.காலனி, அண்ணா காலனி, எம்.கே.நகர், பாலகிருஷ்ண நகர், வாங்கப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

வாங்கல்

குப்புச்சிபாளையம் துணைமின் நிலையத்தை சேர்ந்த வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிபாளையம் கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், மின்னாம்பள்ளி, சங்காரம்பாளையம், பிசி காலனி, என்.புதூர், சிந்தாயூர், நன்னியூர், கோவில்பாளையம், வாங்கல் அக்ரஹாரம், துவாரப்பாளையம், வாங்கல் பசுபதிபாளையம்.

தாந்தோணிமலை துணை மின் நிலையத்தை சேர்ந்த தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதி பாளையம், ஏமூர், மின் நகர், ஆட்சி மங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம்.

வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்தை சேர்ந்த சஞ்சய் நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.

வெள்ளியணை துணை மின் நிலையத்தை சார்ந்த வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.

தென்னிலை

இதேபோல் ஆண்டிசெட்டிபாளையம், ராஜபுரம், ரெங்கநாதபுரம், தாளப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ஆண்டி செட்டிபாளையம் துணை மின் நிலையத்தை சேர்ந்த ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டுமுன்னூர், கார்வழி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரியதிருமங்கலம், அரங்கப்பாளையம், தொக்குப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

ராஜபுரம் துணை மின் நிலையத்தை சேர்ந்த சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், டி.வெங்கிடாபுரம், எல்லமேடு, புஞ்சைகாளக்குறிச்சி, நஞ்சைகாளக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தொக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைபுதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

க.பரமத்தி

ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தை சேர்ந்த காருடையாம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

தாளப்பட்டி துணை மின் நிலையத்தை சேர்ந்த கரூர் ஜவுளிப்பூங்கா, ஆறுரோடு, எஸ்.ஜி.புதூர், மணல்மேடு, காக்காவாடி, குள்ளம்பட்டி, வையப்பம்பட்டி, ஆட்டையாம்பரப்பு, கருப்பம்பாளையம், தும்பிவாடி, பள்ளப்பாளையம், தாதம்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்