மதுரை
வண்டியூர், அலங்காநல்லூர் பகுதியில் இன்று மின்தடை
|பராமரிப்பு பணி காரணமாக வண்டியூர், அலங்காநல்லூர் பகுதியில் இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி காரணமாக வண்டியூர், அலங்காநல்லூர் பகுதியில் இன்று மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
பராமரிப்பு பணி
மதுரை வடக்கு பெருநகர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. எனவே அந்த மின்கோட்ட பகுதிகளான மக்கள் மன்றம், வண்டியூர், வண்டியூர் மெயின் ரோடு, சி.எம்.நகர், சவுராஸ்டிராபுரம், யாகப்பா நகரின் சில பகுதி, அனுமார்பட்டி, தீர்த்தகாடு, சதாசிவம் நகரின் ஒருபகுதி, ஆவின் நகர், அன்புமலர் தெரு, வள்ளலார் தெரு, சபரி தெரு, மருதுபாண்டியர் ெதரு, சித்தி விநாயகர் தெரு, ராஜாஜி தெரு, செந்தில்நாதன் தெரு, ராஜாவீதி, டி.ஆர்.ஓ.காலனி, மண்மலைமேடு, ஜவகர்புரம், செந்தில் குமரன் தெரு, அண்ணா தெரு, ரைஸ்மில் பகுதிகள், ஆத்திகுளம், கங்கை தெரு, குறிஞ்சி நகர், கற்பக விநாயகர் கோவில் தெரு, பலாமி குடியிருப்பு, வீரபுலவர் காலனி, புது டி.ஆர்.ஓ.காலனி, திருவள்ளுவர் நகர், ஜவகர்புரம், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில் பின்புறம், கொடிக்குளம் ஒரு பகுதி, பாரத் நகர், அல்அமின் நகர் முழுவதும், சக்தி நகர், பாண்டியன் நகர் ஒருபகுதி, சண்முகா நகர், சீதா லட்சுமிநகர், வள்ளுவர் காலனி, விவேகானந்தா அவென்யூ, என்ஜினீயர் காலனி, அப்பல்லோ மருத்துவமனை எதிர்புறம், மானகிரி, ஆவின் எதிர்புறம், பாலமந்திர் பள்ளி, உழவர் சந்தை, விஸ்வநாதபுரம், விசாலட்சிபுரம், கிருஷ்ணாபுரம் காலனி 1 முதல் 7-வது தெருக்கள், சொக்கநாதபுரம், பழைய நத்தம் ரோடு, ரிசர்வ்லைன் பகுதிகள், காலாங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படும்.
இத்தகவலை மதுரை வடக்கு கோட்ட என்ஜினீயர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர்
சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் அலங்காநல்லூர் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி, வலையபட்டி, ராம கவுண்டம்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிகல், சின்ன பாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் டேம், எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேர்ந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன் குளம், ஆதனூர், பாலமேடு நகர் பகுதிகள் அலங்காநல்லூர் நகர் பகுதிகள், சுகர் மில் பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார் நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி அரியூர், கோவில்பட்டி, வைகாசி பட்டி, கீழ சின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரியம் தெரிவித்து உள்ளது.