< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் இன்று மின்நிறுத்தம்
|12 Sept 2023 12:15 AM IST
நெல்லிக்குப்பத்தில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
நெல்லிக்குப்பம்,
சாலை விரிவாக்க பணிக்காக நத்தப்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து நெல்லிக்குப்பம் உயர் அழுத்த மின் பாதைகளில் சாலை ஓரமாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதன் காரணமாக நெல்லிக்குப்பம் கந்தசாமி தெரு, பாரதிதாசன் தெரு, ராமு தெரு, திரு.வி.க. தெரு, ஒத்தவாடி தெரு, வான்பாக்கம் சாலை, ஆலை ரோடு, சின்னதெரு, மெயின் ரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவலை நெல்லிக்குப்பம் செயற்பொறியாளர் வள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.