< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
குளித்தலை, தோகைமலையில் இன்று மின் நிறுத்தம்
|25 Oct 2023 12:00 AM IST
குளித்தலை, தோகைமலையில் இன்று (புதன்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கரூர் மின்பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டத்திற்குட்பட்ட, அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, கொசூர் மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய 10 துணை மின் நிலையங்களில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.இதையொட்டி மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்குட்பட்ட குளித்தலை, தோகைமலை, மாயனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.