< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
காவல்காரன்பட்டி பகுதியில் இன்று மின்நிறுத்தம்
|8 Oct 2023 11:50 PM IST
காவல்காரன்பட்டி பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், தளிஞ்சி. சின்னபுத்தூர், வேங்கடத்தான்பட்டி, குப்பனார்பட்டி, தனிக்கொடிபட்டி, ஆர்.டி.மலை, புழுதேரி, வடசேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், நெய்தலூர் காலனி, பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.