சிவகங்கை
காரைக்குடி, இடையமேலூர் பகுதிகளில் இன்று மின்தடை
|பராமரிப்பு பணி காரணமாக காரைக்குடி, இடையமேலூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
காரைக்குடி
காரைக்குடி
காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலைக்கோட்டை, பாரி நகர், ஆறுமுக நகர், மன்னர் நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், செஞ்சை, கோவிலூர் ரோடு, பாதரக்குடி, குன்றக்குடி, நேமம், பிள்ளையார்பட்டி ஆர்ச் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் லதா தேவி தெரிவித்துள்ளார்.
இடையமேலூர்
இடையமேலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இடையமேலூர், கூவானிப்பட்டி, கோமாளிப்பட்டி, சக்கந்தி, புதுப்பட்டி, இ.எம்.காலனி, மாளிகான்பட்டி, கண்டாங்கிபட்டி, வாகுளத்துப்பட்டி, காராமோடை, குமாரப்பட்டி, தமராக்கி, கொத்தங்குளம், மலம்பட்டி, கூட்டுறவுபட்டி, சாலூர், பாப்பாக்குடி, கன்னிமார்பட்டி, ஒக்கப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.