சிவகங்கை
காரைக்குடி, புதுவயல் பகுதியில் இன்று மின்தடை
|காரைக்குடி மற்றும் புதுவயல் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை ஏற்படுகிறது.
காரைக்குடி மற்றும் புதுவயல் பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை ஏற்படுகிறது.
காரைக்குடி
காரைக்குடி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கழனிவாசல், செக்காலை, வாட்டர் டேங், திலகர் நகர், வைரவபுரம், கல்லூரி சாலை, ஆறுமுகநகர், அழகப்பன் அம்பலம் தெரு, பாரி நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
புதுவயல்
அதேபோல் சாக்கவயல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, மித்ராவயல் செங்கரை, திருத்தங்கூர், ஊரவயல், வேங்கா வயல், மாத்தூர், இலுப்பைக்குடி, பொன்நகர், லட்சுமி நகர், கலைமணி நகர், முத்து நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.