< Back
மாநில செய்திகள்
கீழக்கரை, திருவாடானை பகுதிகளில் இன்று மின்தடை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கீழக்கரை, திருவாடானை பகுதிகளில் இன்று மின்தடை

தினத்தந்தி
|
11 July 2023 12:04 AM IST

பராமரிப்பு பணி காரணமாக கீழக்கரை, திருவாடானை பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.

தொண்டி,

திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே திருவாடானை, பாண்டுகுடி, வெள்ளையபுரம், மங்களக்குடி, பதனக்குடி, சிறும்பையூர், சி.கே.மங்கலம், கல்லூர் கருமொழி ஒரிக்கோட்டை, அஞ்சுகோட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

கீழக்கரை பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. எனவே சின்ன மாயாகுளம் பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு சில பகுதி, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மாயாகுளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்