< Back
மாநில செய்திகள்
ஆண்டிமடம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
அரியலூர்
மாநில செய்திகள்

ஆண்டிமடம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

தினத்தந்தி
|
22 Sept 2022 12:15 AM IST

ஆண்டிமடம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

ஆண்டிமடம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சக்திவேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-ஆண்டிமடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம். வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்