< Back
மாநில செய்திகள்
இன்று மின்சாரம் நிறுத்தம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
19 Jun 2023 4:56 PM GMT

சின்னாளப்பட்டி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சின்னாளப்பட்டியை அடுத்த கீழக்கோட்டை துணை மின் நிலையத்தின் நேருஜிநகர் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி சின்னாளப்பட்டி திரு.வி.க. நகர், சின்னாளப்பட்டி பிரிவு, கஸ்தூரி பாய் மருத்துவமனை மெயின்ரோடு பகுதிகள், ஆர்.சி.பள்ளி தெரு ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று சின்னாளப்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்