< Back
மாநில செய்திகள்
இன்று மின் நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

இன்று மின் நிறுத்தம்

தினத்தந்தி
|
17 Jun 2023 2:04 AM IST

கும்பகோணம் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கும்பகோணம்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் நகர் உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் அர்பன் துணை மின் நிலையத்தில் இன்று(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கும்பகோணம் நகர் முழுவதும் மற்றும் கொரநாட்டு கருப்பூர், செட்டி மண்டபம், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் இ்ன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்