திருப்பத்தூர்
வாணியம்பாடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்
|வாணியம்பாடி பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வாணியம்பாடி மின் நிலையத்திற்குப்பட்ட துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணி இன்று (வியாழக்கிழமை) வியாழக்கிழமை நடக்கிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, செட்டியப்பனூர், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூர், குரும்பதெரு, பெத்தவேப்பம்பட்டு ஆகிய பகுதிகள் மற்றும் ஆலங்காயம், காவலூர், பூங்குளம், வெள்ளகுட்டை, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்.எம்.எஸ்.புதூர், நாயக்கனூர், நரசிங்கபுரம், கல்லரபட்டி, பீமகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், திம்மாம்பேட்டை, சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரபாண்டகுப்பம், அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், கேத்தாண்டப்பட்டி, புத்துகோயில், பெத்தகல்லுபள்ளி, பெரியமோட்டூர், சுகர்மில் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவலை வாணியம்பாடி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.