< Back
மாநில செய்திகள்
இன்று மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல்
மாநில செய்திகள்

இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
23 Dec 2022 12:15 AM IST

குமாரபாளையம், பள்ளிபாளையம், உப்புப்பாளையம் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

குமாரபாளையம்

நாமக்கல் மாவட்டம் உப்புபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோடமங்கலம், வால்ராஜபாளையம், அம்மன் கோவில் நவக்காடு, உப்புபாளையம், ஆத்திக் காட்டூர், நட்டுவம்பாளையம், ஆனங்கூர் ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குமாரபாளையம் நகரம், கோட்டைமேடு, மேட்டுக்கடை, கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி, சத்யா நகர், காட்டுவலசு, கோட்டைமேடு, வேமன் சாமியம்பாளையம், டி.வி.நகர், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், ஓலப்பாளையம், தட்டான்குட்டை, எதிர்மேடு, கல்லங்காட்டுவலசு மற்றும் வளையக்காரனூர், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி அருகிலுள்ள துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசன் பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், கடச்சநல்லூர், தாஜ்நகர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்