< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
இன்று மின்சாரம் நிறுத்தம்
|26 July 2022 5:34 PM IST
கன்னிவாடி பகுதியில், இன்று (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கன்னிவாடி துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னிவாடி பேரூராட்சி பகுதி, பண்ணப்பட்டி, சுரக்காய்பட்டி, தர்மத்துப்பட்டி, சர்க்கரை கவுண்டர் சாலை, வெள்ளமரத்து பட்டி, கீழ திப்பம்பட்டி, மேல திப்பம்பட்டி, டி.புதுப்பட்டி, தோனிமலை, தெத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என்று கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.காத்தவராயன் தெரிவித்துள்ளார்.