ராணிப்பேட்டை
வாலாஜாவில் இன்று மின் நிறுத்தம்
|வாலாஜாவில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த வாலாஜா உபகோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பின் கீழ் உயர் மின் அழுத்த மின் பாதையில் உள்ள மரக்கிளைகளை அகற்றப்பட உள்ளது.
இதனால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வாலாஜா அரசு மருத்துவமனை, எம்ஜிஆர் நகர், காந்தி நகர், சாந்தி நகர், லாலாபேட்டை தெத்து தெரு, கடப்ப ரங்கையன் தெரு, அம்பேத்கர் நகர், காவலர் குடியிருப்பு புதிய இ.பி.காலனி, புதிய தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சார்பதிவாளர் அலுவலகம், கீழ்புதுப்பேட்டை, திருவள்ளுவர் நகர், திரவுபதி அம்மன் கோவில் தெரு, மசூதி தெரு, காந்தி பூங்கா பின்புறம், ஜம்பையன் தெரு, படவேட்டம்மன் கோவில், சோளிங்கர் ரோடு, திருமலை நகர் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை செயற்பொறியாளர் குமரேசன் ெதரிவித்துள்ளார்.