< Back
மாநில செய்திகள்
இன்று மின் நிறுத்தம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

இன்று மின் நிறுத்தம்

தினத்தந்தி
|
7 Oct 2023 12:30 AM IST

சீர்காழி அருகே இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சீர்காழி;

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் சீர்காழி நகர் பகுதி மற்றும் மகேந்திரப்பள்ளி செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணி நடக்க உள்ளது. எனவே திருக்கோலக்கா, ரயில்வே ரோடு, கோயில்பத்து, பனங்கட்டான்குடி ரோடு, விளந்திடசமுத்திரம், ஊழியன் காரன்தோப்பு, புளிச்சக்காடு, மகேந்திரப்பள்ளி, காட்டூர், கோதண்டபுரம், அளக்குடி, முதலைமேடு, முதலைமேடுதிட்டு மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இதைப்போல வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால் சட்டநாதபுரம், காரைமேடு, தென்னாலகுடி, மேலச்சாலை மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்