< Back
மாநில செய்திகள்
இன்று மின் நிறுத்தம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

இன்று மின் நிறுத்தம்

தினத்தந்தி
|
5 Aug 2023 12:15 AM IST

நாகை, கீழ்வேளூர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

நாகப்பட்டினம்:

நாகை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் நடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை நகர் பகுதிகளில் உள்ள மின் பாதைகளில் பருவமழை முன்னேற்பாடாக பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாகை நகரம், கோட்டைவாசல் படி, நீலா வீதிகள், பீச் ரோடு, வெளிப்பாளையம், காடம்பாடி, தெற்கு பால்பண்ணைச்சேரி, கலெக்டர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாகை உதவி செயற்பொறியாளர் (தெற்கு) ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கீழ்வேளூர், கூத்தூர், கோகூர், ஆனைமங்கலம், அகரகடம்பனூர், ஆழியூர், புலியூர், வடக்காலத்தூர், இலுப்பூர், ராதாமங்கலம், தேவூர், இருக்கை, வெண்மணி, கிள்ளுக்குடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்