< Back
மாநில செய்திகள்
26-ந் தேதி மின்நிறுத்தம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

26-ந் தேதி மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
24 Sept 2023 1:45 AM IST

திருபுவனம், திருநாகேஸ்வரத்தில் 26-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவிடைமருதூர்;

திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் திருநீலக்குடி, திருநாகேஸ்வரம், விட்டலூர், ஏழாம்கட்டளை, அந்தமங்கலம், திருபுவனம், அம்மாசத்திரம், திருபுவனம் இன்டஸ்டிரியல் எஸ்டேட், முருக்கங்குடி, தண்டந்தோட்டம் ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், நெடார், புத்தகரம், அம்மன்குடி, தேப்பெருமாநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் 26-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர்தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்