< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
தென்காசி, சங்கரன்கோவில் வட்டார பகுதியில் 11-ந் தேதி மின்தடை
|10 July 2023 12:15 AM IST
தென்காசி, சங்கரன்கோவில் வட்டார பகுதியில் 11-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின்நிலையம், நடுவக்குறிச்சி துணை மின்நிலையம் ஆகியவற்றில் 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் தென்காசி புதிய பஸ்நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் மற்றும் சங்கரன்கோவில் வட்டார பகுதியான பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, மின்வினியோக செயற்பொறியாளர்கள் கற்பகவிநாயக சுந்தரம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.