< Back
மாநில செய்திகள்
உப்பிடமங்கலம்- காவல்காரன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
கரூர்
மாநில செய்திகள்

உப்பிடமங்கலம்- காவல்காரன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
21 Sept 2023 12:06 AM IST

உப்பிடமங்கலம்- காவல்காரன்பட்டி பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர் கோட்டத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம், எஸ்.வெள்ளாளப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சணப்பிரட்டி, தொழிற்பேட்டை, ஆசிரியர் காலனி, தமிழ்நகர், மேலப்பாளையம், சிட்கோ ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர் மற்றும் பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

புகழூர் துணைமின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புன்செய் புகழூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவுட்டுப்பாளையம், நடையனூர், சேமங்கி, தர்மராஜபுரம், ஒரத்தை, மேட்டுப்பாளையம், நானபரப்பு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை புஞ்சை தோட்டக்குறிச்சி மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்