< Back
மாநில செய்திகள்
சோமூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
கரூர்
மாநில செய்திகள்

சோமூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி
|
21 April 2023 12:42 AM IST

சோமூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஒத்தக்கடை துணைமின் நிலையத்தை தரம் உயர்த்துவதற்கு மேம்பாட்டு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஒத்தக்கடை, சோமூர், வேடிச்சிப்பாளையம், எழுத்துப்பாறை, கல்லுப்பாளையம், திருமுக்கூடலூர், நெரூர் அக்ரஹாரம், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், மரவாப்பாளையம், புதுப்பாளையம், அரங்கநாதன்பேட்டை, அச்சமாபுரம், பதினாறுகால் மண்டபம், செல்லிபாளையம், கோயம்பள்ளி, பெரியகாளிபாளையம், சின்ன காளிப்பாளையம், சேனப்பாடி, மல்லாம்பாளையம், முனியப்பனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

இதேபோல் வேப்பம்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட வடிவேல் நகர் மின்பாதையில் மேம்பாட்டு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வேப்பம்பாளையம், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், ரெட்டிப்பாளையம், வடிவேல் நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்