< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை
|16 Sept 2023 12:35 AM IST
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
சிவகாசி,
சிவகாசி கோட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, கங்கரக்கோட்டை, ந.சுப்பையாபுரம், சாத்தூர், சிவகாசி இ.எஸ்.ஐ., சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய அதிகாரி பாவநாசம் கூறினார். அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. ஆதலால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லி, மாநகசேரி, மல்லிபுதூர், வேண்டுராயபுரம், ஈஞ்சார், சாமிநத்தம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய கோட்ட பொறியாளர் சின்னத்துரை கூறினார்.