சிவகங்கை
சிவகங்கையில் இன்று மின்தடை
|சிவகங்கையில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
சிவகங்கை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை செந்தமிழ் நகர், கலெக்டர் அலுவலக வளாகம், மருதுபாண்டியர் நகர், சிபி காலனி, பெரியார் நகர், முத்துச்சாமி நகர், மஜித் ரோடு, உழவர் சந்தை, சந்தைப்பேட்டை, ஸ்டேட் பேங்க் வீதி, காந்திவீதி, கோர்ட்டு வாசல், ராம்நகர், லட்சுமண நகர், கொட்டகுடி ரோடு, மேலூர் ரோடு, மதுரை ரோடு, சிவன் கோவில் வீதி, மீனாட்சி நகர், சத்தியமூர்த்தி தெரு, பாரதி நகர், ராமசாமி நகர், இந்திரா நகர், நேரு, பஜார், பஸ் நிலையம் வீதி, கோட்டை முனியாண்டி கோவில், இளையான்குடி ரோடு, மானாமதுரை ரோடு, சிவகங்கை ஊரக பகுதிகளான முத்துப்பட்டி, பொன்னாகுளம், மானாகுடி, பனையூர், பையூர், அண்ணாமலை நகர், வேம்பங்குடி, ஆலங்குளம், செங்குளம், வல்லனி, உடையநாதபுரம், சோழபுரம், காமராஜர் காலனி, எஸ்.பி.பங்களா மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.