< Back
மாநில செய்திகள்
சிங்கம்புணரியில் இன்று மின் நிறுத்தம்
சிவகங்கை
மாநில செய்திகள்

சிங்கம்புணரியில் இன்று மின் நிறுத்தம்

தினத்தந்தி
|
8 Aug 2022 12:17 AM IST

பராமரிப்பு பணி காரணமாக சிங்கம்புணரியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்புணரி மற்றும் காளாப்பூர் துணை மின் நிலையத்தில் இன்று(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைபட்டி, செருதப்பட்டி, என்பீல்டு மற்றும் அ.காளாப்பூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான எஸ்.வி.மங்கலம், காளாப்பூர், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரி பட்டி, செல்லியம்பட்டி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்து உள்ளார்.

Related Tags :
மேலும் செய்திகள்